பள்ளிவாசலில் கரோனா பேரிடர் உதவி மையம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கடையநல்லூ ரில் உள்ள மரியம் பள்ளிவாசலை கரோனா பேரிடர் உதவி மையமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மாற்றியது. இந்த மையத்தை வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துன் நாசர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் செய்யது மசூது சாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் வட்டாட்சியர் ஆதிநாராயணன், துணை வட்டாட்சியர் ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மையத்தில் அவசர தேவைக்காக ஆக்சிஜன் செறிவூட் டிகள், கையடக்க ஆக்சிஜன் கலன்கள், ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.மருத்துவமனை தகவல் மற்றும் வழிகாட்டுதல் கள், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை, உயிரிழந்த உடல் களை நல்லடக்கம் செய்தல் ஆகிய பணிகளுடன் நோயால் பாதிக்கப் பட்டோருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். அவசர கால ரத்ததானம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து பேரிடர் கால சேவை பணிகள் ஆகியவை இந்த உதவி மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

ஆக்சிஜன் தேவைக்கு 9976122408, 7200000477, மருத்துவ மனை தகவல் மற்றும் வழிகாட்டுதல் சேவைக்கு 9597340450, 8070523234, கபசுரக் குடிநீர் வழங்க 8870704541, இறந்தவர் உடலை அடக்கம் செய்ய 9597705763, 7373505070, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல்ரீதியான ஆலோசனை களுக்கு 9715245822, அவசர கால ரத்ததானத்துக்கு 8870523234 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்