பண்பொழி அருகே பாறையில் வழுக்கி விழுந்து பெண் யானை உயிரிழந்தது.
தென்காசி மாவட்டத்தில் வடகரை மற்றும் அதைச்சுற்றி யுள்ள பகுதிகளில் காட்டு யானை கள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களையும், தென்னை, மா போன்ற மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
பண்பொழி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி பூலான்குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு ஒரு பெண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “இறந்து 3 நாட்களான இந்த பெண் யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்த நிலையில், பாறையில் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம். யானையின் உடல் கால்நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago