கரோனா தடுப்பூசி செலுத்த இளைஞர்கள் ஆர்வம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கு 18 வயது முதல் 44 வயது வரையுள்ள வர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நாகர்கோவில் டதி பள்ளி, புனித அலோசியஸ் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட தடுப்பூசி மையங்களில் காலையில் இருந்தே ஏராளமானோர் கூடுகின்றனர். கடந்த 3 நாட்களாக தினமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 918 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 16 பேர் மரணமடைந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 408 ஆக இருந்தது. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. வட்டார அளவில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 39, மானூர்- 22, நாங்குநேரி- 27, பாளையங்கோட்டை- 31, பாப்பாக்குடி- 8, ராதாபுரம்- 50, வள்ளியூர்- 78, சேரன்மகாதேவி- 24, களக்காடு- 20.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 370 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 367 பேர் உட்பட இதுவரை 17 ஆயிரத்து 370 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4.061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 691 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்