திருவெண்ணெய்நல்லூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
செவிலியர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையினை எடுத்துரைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேலமங்கலம், வளையாம்பட்டு, செம்மார் ஆகிய கிராமங்கள், மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப் படுகிறது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து டி.எடையார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருவெண் ணெய்நல்லூர் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாட்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைப்பதற்கு இடம் தேர்வுசெய்யப்பட்டு கட்டடம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்பிராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago