காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் - கரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சிகிச்சை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் பழைய அரசு மருத்து வமனையும், சூரக்குடி சாலையில் புதிய மருத்துவமனையும் செயல்ப டுகின்றன. 2 இடங்களிலும் 120 படுக்கைகள் இருந்தன.

படுக்கைகள் நிரம்பியதை யடுத்து புதிய மருத்துவமனை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கரோனா மையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த மையத்தை இரு நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

இந்நிலையில், அன்றைய தினமே பழைய மருத்துவமனை, புதிய மருத்துவமனையில் இருந்து கரோனா தொற்று மற்றும் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற வர்கள் மாற்றப்பட்டனர்.

சில மணி நேரத்திலேயே அங்கு அனுமதிக்கப்பட்ட சிலர் அடுத்த டுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் இரவு அங்கிருந்த நோயாளிகள் சிலரை, புதிய மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே செயல்பட்ட கரோனா வார்டுக்கும், அமராவதி புதூர் கரோனா மையத்துக்கும் மாற்றி னர்.

மேலும் சிலரை மேல் சிகிச்சைக் காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் நேற்று மீண்டும் காரைக்குடி அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஏற்கெனவே உள்ளபடி பழைய மருத்துவமனையில் கரோனா தொற்று, கரோனா அறிகுறியுடன் வருவோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். நோயாளிகள் படிப்படியாக குணமடைவதைப் பொறுத்து புதிதாகத் திறக்கப்பட்ட கரோனா கட்டிடத்துக்கு மாற்றப்படுவர்.

போதிய ஆக்சிஜன் இருப்பில் உள்ளதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவப் பணி யாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும், என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE