லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியை திரும்ப பெற வேண்டும் : பிரதமருக்கு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

By செய்திப்பிரிவு

லட்சத்தீவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம், பிரதமர் நரேந்திர மோடிக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு வில் கூறியுள்ளதாவது:

லட்சத்தீவில் பெருமளவில் இஸ்லாமிய மக்கள் வசிக் கின்றனர். இங்கு இதுவரை ஐஏஎஸ் அதிகாரிகளே நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது பாஜகவைச் சேர்ந்த பிரபுல் கோடா பட்டேல் என்பவர் நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, அங்கு சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருகிறார். அவர் கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. இது இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது.

லட்சத்தீவில் வசிக்கும் மக் களின் விருப்ப உணவான மாட்டி றைச்சி விற்பனையைத் தடை செய்துள்ளார். மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். லட்சத்தீவில் வாழும் மக்களைத் தவிர மற்றவர்கள் அங்கு சொத்துகளை வாங்க முடியாது என்ற விதியை மாற்றியுள்ளார்.

இது கார்ப்பரேட் நிறுவனங் களுக்குச் சாதகமான நடவடிக்கை யாகும்.

இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை புதிதாக நிய மிக்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரி செய்து வருகிறார்.

எனவே, லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா பட்டேலை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உரிமைகளைப் பாது காக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்