போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்து விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானங்களை நிறை வேற்றாமலேயே கவுன்சிலர்கள் அனை வரும் வெளிநடப்புச் செய்தனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிக்குழுக் கூட்டம் அதன் தலைவர் சுமதி (அதிமுக) தலைமையில் தொடங்கியது. அதிமுக, திமுக உள்ளிட்ட 24 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 34 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது, ஒன்றியக் கவுன்சிலர்களுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி தீர்மானங்களில் கையெழுத்திடாமல் கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். மேலும், கடந்த ஆண்டு ரூ.3 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியதில் ரூ.1 கோடி இதுவரை செலவிடப்பட்டும் கவுன்சிலர்களுக்கு அதில் நிதி ஒதுக்கீடு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
நிதி ஒதுக்கீடு இல்லாததால் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள முடியவில்லை, பணிகள் நடைபெறாததால் பொதுமக்களின் கேள்விகளுக்குத் தங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்று கவுன்சிலர்கள் குறிப் பிட்டனர்.
வெளிநடப்பில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கவுன்சிலர் களுக்கு நிதி வழங்காததால் வளர்ச்சித் திட்டப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எங்கள் வார்டுகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், தேர்தல் சமயத்தில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ரூ.3 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியதில் ரூ.1 கோடி இதுவரை செலவிடப்பட்டும் கவுன்சிலர்களுக்கு அதில் நிதி ஒதுக்கீடு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago