கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மாவட்ட சமூகநல அலுவரை தொடர்பு கொள்ளலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி tnngocoordination@gmail.com ஆகும்.
தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இக்குழுக்கள் பாலமாக செயல்படும். விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூகநல அலுவலரை 9385867445 என்ற எண்ணில் அல்லது msknamakkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago