தென்காசியில் மருத்துவக் கல்லூரி : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

``தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பரிசீலனை செய்யப்படும்” என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் மூலமாக கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் செயல்படுகின்றன. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு 2 இடங் களில் தனி சிகிச்சை மையம் உள்ளது. தமிழ்நாட்டிலேயே இய ற்கை மருத்துவ சிகிச்சையளித்து வருவது தென்காசி மாவட்டம்தான். மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் அமைக்க பரிசீலனை செய்யப்படும்.

மாவட்டத்தில் 1,256 முன்களப் பணியாளர்கள் மற்றும் தன்னார் வலர்கள் மூலம் வீடுகள்தோறும் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இவர்களுக்கு 500 பல்ஸ் ஆக்ஸியோ கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தென்காசி அரசு மருத்துவமனையில் 70 ஆக்சிஜன் இல்லா படுக்கைகள் மற்றும் 63 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ஒன்றரை கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவை 5 கிலோ லிட்டராக அதிகரிக்கவும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிதாக 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கிடங்கு நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்படும். சிவகிரி, கடையநல்லூர், புளியங்குடி, ஆலங்குளம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்வதற்கு ஒருங்கிணைந்த குழாய் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்