கரோனா கட்டுப்பாடு பணியில் ஈடுபட இலவச பயிற்சி :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அந்த வகையில், இந்திய அரசின் PMKVY 3.0 திட்டத்தின், Health Sector-ன் கீழ், 1. Emergency Medical Technician – Basic, 2. General Duty Assistant (GDA), 3. GDA-Advanced (Critical Care), 4. Home Health Aide, 5. Medical Equipment Technology Assistant, 6. Phlebotomist ஆகிய பணிகளுக்கு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக குறுகிய கால பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட ஆர்வமுள்ள, 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதியுடன் 18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் இப்பயிற்சியில் சேர ric10pettai@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94990 55790 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தங்களது விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்