கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க - 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி : தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க 4 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை அருணை மருத்துவ மனை, ரமண மகரிஷி ரங்கம்மாள்மருத்துவமனை, ராஜி மருத்துவ மனை மற்றும் சேத்துப்பட்டு புனித தாமஸ் மருத்துவமனை என 4 தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக தீவிரம் இல்லாத நோயாளிகளுக்கு (ஆக்சிஜன் வசதி இல்லாமல்) ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் தீவிரம் இல்லாத நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரம், வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.35 ஆயிரம், ஊடுருவா வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஆக்சி ஜன் உதவியுடன் படிப்படியாக குறைக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் என தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெற்றால் 1800 425 3993 மற்றும் 104 ஆகிய இலவச தொலைபேசியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்