திருவண்ணாமலை மண்டலத்தில் - அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

தி.மலை அரசு போக்குவரத்து பணிமனையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடை பெற்றது.

சுகாதாரத் துறை மூலம் தி.மலை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 3,700 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு முகாம், தி.மலை காஞ்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நேற்று நடை பெற்றது. அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது அவர், கரோனா தொற்று பரவலை தடுக்க முகக் கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். அப்போது, கோட்டாட்சியர் வெற்றிவேல், மண்டல பொது மேலாளர் தசரதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, தி.மலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, நல்லவன்பாளையம் ஊராட்சியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்காக நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும் அவர், திருவண்ணா மலை காந்தி சிலை அருகே நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமையும் பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்