வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் நேற்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 7ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் வேளாண் திருத்தசட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி யும், டெல்லியில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடிய தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மீது கடந்தஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், கோவைமாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வீடுகள், தோட்டங் களின் முன்பு கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
கருமத்தம்பட்டியில் நடந்த போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். பேரூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, அன்னூர், சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசா யிகள் தங்களது வீடு, தோட்டங்களின் முன்பு கருப்புக் கொடி ஏற்றினர்.
இதுதொடர்பாக, சு.பழனிசாமி கூறும்போது, ‘‘மாவட்டம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வீடு, தோட்டங்களில் கருப்புக் கொடி ஏற்றினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்’’ என்றார்.
திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டத் தலைமை அலுவலகம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி கிடாத்துறைபுதூர், ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், பட்டுக்கோட்டையார் நகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட், ஏஐடியுசி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு கொடி ஏற்றிவைத்து போராட்டம் நடை பெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago