கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மத்திய அரசைக் கண்டித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் வாழ்வுரிமை யைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்கள்விரோத மத்திய மோடி அரசாங்கம்ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தோடு கடலூர் ஜவான் பவன் அருகில்நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக நகரசெயலாளர் ராஜா, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் அமர்நாத், மதிமுக நகர செயலாளர் ஐயப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப்,விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் செந்தில், மக்கள் அதிகாரம் பாலு ,வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் சிதம்பரம் பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் விழுப்புரம் மாவட்டம் கிளியனூரிலும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்