மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவ.26-ம் தேதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் நேற்று கருப்பு தினமாக அனுசரித்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தும் போராட்டத்தை நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் கொல்லங்குடி, மாரந்தை, காளையார்கோவில் வேளாரேந்தல், மறவமங்கலம், பூவந்தி, எம்.பறையன்குளம், கானூர், ஏனாதி, பெருமாள்பட்டி, கண்டாங்கிபட்டி, தமராக்கி, திருமலை, ஒக்கூர், கீழப்பூங்குடி, வீரப்பட்டி, உசிலம்பட்டி, இலுப்பக்குடி உள்ளிட்ட 200 இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago