கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட கரோனா தடுப்பு பணி கண்காணிப்பாளர் மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரக தலைமைப் பொறியாளர் அ.குற்றாலிங்கம், மாறாந்தை ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி மற்றும் உபகரணங்களை வழங்கினார்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இணையதளம் மூலம் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், செயற்பொறியாளர் முருகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பிரான்சிஸ் மகாராஜன், உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்