வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் - 250 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு :

By செய்திப்பிரிவு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு வார்டு இன்னும் 2 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என மருத் துவர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூரில் தினசரி தொற்று பரவல் அதிகரித்து வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. படுக்கை வசதி இல்லாமல் அனைத்து வார்டு களும் நிரம்பியுள்ளன. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே நோயாளிகள் காத்திருக்கின்றனர். அதில், போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் பல உயிரிழப்பு சம்பவங்களும் வேலூர் அரசு மருத்துவமனையில் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இங்கு, கூடுதலாக 2 அரங்கம் ஏற்படுத்தி அதில், 250 படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி பொருத்தும் பணிகளும், மின்விசிறி பொருத்தும் பணிகள், நடமாடும் கழிப்பறை ஏற்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் 2 நாட்களில் இந்த சிறப்பு வார்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘‘வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர கரோனா சந்தேக வார்டு, மூச்சுத் திணறல் வார்டு உள்ளிட்ட வார்டுகளில் 450-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவ மனை வளாகத்தில் 250 படுக்கை வசதியுடன் தனியாக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மின் இணைப்புகள் பொருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் 250 படுக்கை வசதியுடன் கூடுதலாக சிறப்பு வார்டு தயாராகிவிடும். அதற்குப் பிறகு அரசு மருத்துவமனையில் நோயாளி கள் காத்திருக்க வேண் டிய நிலை இருக்காது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்