திருவண்ணாமலை மாவட்டத்தில் - ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரி யர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் படுகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொறி யியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அரசு மருத் துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, அவர்கள் பணிபுரிந்து வரும் கல்வி நிறுவன வளாகத்திலேயே சுகாதாரத் துறை மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கல்வி நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் 04175 – 1077, 04175 – 233344, 04175-233345 மற்றும் 88707-00800 எனற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்