குறிஞ்சிப்பாடி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூர் பேரூராட்சி, இந்திராநகர், வடக்குத்து ஊராட்சி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புஅமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் நேற்று குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட ராஜேஸ்வரி நகர், வடலூர் பார்வதிபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வடக்குத்து ஊராட்சிசார்பில் இந்திரா நகரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர், குறிஞ்சிப்பாடி, வடலூர், பகுதியில் அதிகமாக கரோனா தொற்று காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் யாரும் வெளியேவரவேண்டாம். அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் மகேந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago