ஊரடங்கு விதி மீறினால் கடும் நடவடிக்கை : தென்காசி எஸ்பி எச்சரிக்கை

`ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, தென்காசி எஸ்பி சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் காவல்துறை, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ‘பசிக்கிறதா- எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற, உணவுக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியைப் போக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தென்காசி எஸ்பி சுகுணாசிங் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:

ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்கள், பசித்தோர் இலவசமாக சாப்பிடும் விதத்தில், கடையநல்லூர் காவல் துறை ஏற்பாட்டில், காலை, மதியம், இரவு மூன்று நேரங்களிலும் இங்கே இலவசமாக உணவு ஏற்பாடு செய்ய, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஊரடங்கு முடிந்த பின்னரும் இதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் உறுதி அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட எல்லையில் 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. தற்போது, ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து இன்னொரு காவல் நிலையை எல்லைக்கு அனாவசியமாக செல்வதைத் தடுக்க கூடுதலாக 24 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி, தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்தால் இனி வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் தேவைப்பட்டால், காவல்துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இலவசமாக சாப்பிடும் விதத்தில், கடையநல்லூர் காவல் துறை ஏற்பாட்டில், காலை, மதியம், இரவு மூன்று நேரங்களிலும் இலவசமாக உணவு ஏற்பாடு செய்ய, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்