விழுப்புரம் மாவட்டத்தில் கடைவீதிகளில் நேற்று மக்கள் குவிந்தனர்.
கரோனா பரவல் காரணமாக இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நேற்று முன்தினம்மாலை முதல் நேற்று நள்ளிரவு வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் நேற்றுமுன்தினம் மாலை முதல் நேற்றுஇரவு 9 மணி வரை கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள்கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிரதான சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.
காவல்துறையினர் கரோனா சிகிச்சை மையங்கள், சட்டம் ஒழுங்கு என பிரிக்கப்பட்டு இருந்ததால், போதுமான காவல்துறை யினர் இல்லாததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த திணறினர்.
வணிக வளாகங்கள் திறக்கஅரசு தடைவிதித்து இருந்தாலும், பாதி ஷட்டரை திறந்து வைத்து குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் வெளியே வந்தவுடன் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி வழக்கம் போல வியாபாரம் நடைபெற்றது.
காய்கறிகள் இருமடங்கு விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டது. இருந்தாலும் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வழக்கமாக ஞாயிற்றுகிழமை சோம்பலாக பொழுதை கழிக்கும் பொதுமக்கள் நேற்று பரபரப்பாக இயங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago