மத்திய கிழக்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் புதிய காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்ட லமாகவும், மே 24-ம் தேதி ‘யாஸ்’ புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் ஆந்திர கட லோரப் பகுதி, மன்னார் வளை குடா, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண் டலம் அந்தமானின் போர்ட் பிளேருக்கு தென்மேற்கே 560 கி.மீ. தொலைவிலும், ஒடி சாவின் பாரதீப் துறைமுகத் துக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago