வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் - 18-44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மே 20-ம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆனால், கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளி யிடப்படாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்க வில்லை.

இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால், கரூர் கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத் தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் கூறும்போது, “18 வயது முதல் 44 வய துக்குட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக கரூர் மாவட் டத்துக்கு 13,000 தடுப்பூசிகள் வந்துள்ளன.

ஆனால், இவ்வயது பிரிவில் யாருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என உரிய வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வெளியிடப்படாததால், இவ்வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் தொடங்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்