வேலூர் அருகேயுள்ள பெருமுகை, பிள்ளையார் குப்பம் பகுதி பாலாற் றில் மணல் கடத்தலை தடுக்க பொது மக்கள் சார்பில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது.
வேலூரில் ஊரடங்கு கட்டுப் பாடுகள் இருந்தாலும் பெருமுகை, பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து மணல் கடத்தல் தடையில்லாமல் நடைபெறு வதாக கூறப்படுகிறது. மாட்டு வண்டிகள் மூலமாகவும், இரு சக்கர வாகனங்கள், டிப்பர் லாரிகளில் மணல் கடத்தல் தொடருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், மணல் கடத்தலை தடுக்க வேண்டிய காவல் துறையினரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாலாற்றுக்கு செல்லும் பாதையில் ராட்சத பள்ளத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பெருமுகை திரவுபதி யம்மன் கோயில் வழியாக பாலாற்றுக்கு செல்லும் பாதையில் ஆற்றின் கரையோர பகுதியில் ‘பொக்லைன்’ இயந்திரத்தின் உதவியுடன் நேற்று ராட்சத பள்ளத்தை தோண்டினர். இந்த பகுதிக்கு அருகில் மாட்டு வண்டிகள் மூலம் செல்லும் பாதையிலும் பள்ளம் தோண்டியுள்ளனர்.
தற்போது, தோண்டப்பட்டுள்ள பள்ளத்தையும் மூடிவிட்டு மீண்டும் மணல் கடத்த முயன்றால் சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago