ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை நாமக்கல் ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று சங்கிலியை உடைப்பது மட்டுமே தொற்றை கட்டுப்படுத்தும் வழி. இங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள், 140 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 180 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கரோனா பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சிறப்பு சிகிச்சை மையத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சார்பில் 239 போர்வை, முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் 100 கட்டில், மெத்தை மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, எம்பி ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தார்.
நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயந்தி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago