விழுப்புரம் மாவட்டத்தில் சொர்ணவாரி நெல் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சொர்ணவாரி பருவத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில் 17,400 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இதற்கு தேவையான குறுகிய கால நெல் ரகங்கள் 62 மெட்ரிக் டன்கள் இருப்பு உள்ளன. குறுகிய கால நெல் விதைகள் 87 மெட்ரிக் டன்கள் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து விரைவில் வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள்வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் விதைகளை வாங்கி நாற்று விடும் பணியை துவக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,
சொர்ணவாரி பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. மத்திய அரசால் டிஏபி விலையினை மூட்டைக்கு ரூ.1,200-ல் இருந்து ரூ.1,900 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒரு மூட்டைக்கு ரூ. 700 மானியத்தினை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு பழைய விலையான மூட்டைக்கு ரூ.1,200- க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது, எனவே விவசாயிகள் டிஏபி உரத்தினை ஒரு மூட்டைக்கு ரூ. 1,200-க்கு வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முழு ஊரடங்கு காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், விதைகள். உரங்கள் தொடர்பாக விவரம் தெரிந்து கொள்ளவும் வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம். இதன்படி கோலியனூர் 9443771455, காணை 9976885331, கண்டமங்கலம் 9442486049, விக்கிரவாண்டி9443778776, வானூர்9443577132, மயிலம் 9344374558, ஒலக்கூர் 9976126021, மரக்காணம் 9443050514, செஞ்சி 9442238550, வல்லம் 9444573720, மேல்மலையனூர் 9486985445,முகையூர்9442395592,
திருவெண்ணைநல்லூர் 9442982172 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் ரமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் விளைவித்த விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago