கரோனா தொற்றை துல்லியமாகக் கண் டறிய சிடி ஸ்கேன் எடுக்க காப்பீடு திட்டம் எளிமைப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அறிகுறிகள் அடிப்படையில், கரோனா தொற்றைக் கண்டறிய ஆர்டி பிஸிஆர் (RT PCR) கரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. இந்தப் பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்று முடிவு கள் வந்தாலும், பலருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்போது, நுரையீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
அதனால், தற்போது நோய்த் தொற்று அறிகுறியுடன் இருப் பவர்கள், நோய் முற்றியவர்கள் பெரும்பாலும் சிடி ஸ்கேன் பரிசோதனையே செய்கின்றனர்.
அதனால், சிடி ஸ்கேன் மையங்கள் மட்டுமில்லாது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் பரி சோதனை எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிடி ஸ்கேன் அடிப்படையிலேயே மருத்துவர்கள் தற்போது கரோனா பாதிப்பின் நிலையை அறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5 சிடி ஸ்கேன் மற்றும் 2 எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை இயந்திரங்கள் உள்ளன. தினமும் 120-லிருந்து 150 சிடி ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. கரோனா தொற்று அறிகுறியோடு வருபவர்கள் மற்றும் இதர பிரிவுகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் பயன்பாட்டை நிர்வகித்து வரும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500 மற்றும் மருந்து செலுத்தி எடுப்பதற்கு ரூ.800 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
அதே போல், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.2,500 முதல் ரூ.4000 (மருந்து செலுத்தி எடுப்பதற்கு) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று சலுகை இருந்தாலும் விண்ணப்பம் பெறப்பட்டு சென்னை தலைமை மருத்துவக் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து அனுமதி பெற (Approval) ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் கரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்று தெரியாமலேயே பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள முடியாமல் பதற்றம் அடைகின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தனியார் மருத்துவமனைகள மற்றும் தனியார் சென்டர்களில் சிடி ஸ்கேன் எடுப் பவர்களின் தேவை அதிகரித்திருப்பதால், கட்டணங்களை சத்தமில்லாமல் அதிகரித்து விட்டனர். சாதாரணமாக சிடி ஸ்கேன் எடுக்க ரூ.3000 லிருந்து ரூ.5000 வரை வசூலிக்கிறார்கள்.
மருந்து செலுத்தி எடுப்பது மற்றும் சில பிரத்யேக ஸ்கேன்களுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கின்றனர்.
கரோனா பேரிடர் காலத்தில் ஆயிரக் கணக்கில் செலவழித்து ஸ்கேன் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.
மருத்துவக் காப்பீடு அட்டையை பயன்படுத்தி தனியார் ஸ்கேன் சென்டர்களில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளன. இதன் அடிப்படையில் எடுக்க சென்றாலும் தாமதம் ஆகிறது.
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயித்தல், RT-PCR பரிசோதனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்ததுபோல் CT ஸ்கேன் எடுப்பதற்கான கட்டணத்தை முறைப் படுத்தவில்லை.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்து வமனைகளில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கான அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அனுமதி (Approval) அதே நாளில் ஒரு சில மணி நேரத்தில் கிடைத்திட நடைமுறைகளை எளிமைப்படுத்திட வேண்டும்.
கரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தில் சிடி ஸ்கேன் கட்டணத்தை தனியார் சென்டர்களில் லாப நோக்கமின்றி குறைந்த கட்டணத்தை வசூலிக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago