புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை திருவப்பூரில் கரோனா தடுப்பூசி முகாமை நேற்று தொடங்கி வைத்து அவர் பேசியது:
ஒவ்வொரு கிராமத்திலும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்கெனவே 350 ஆக்சிஜன் படுக்கைகள் இருந்தன. இவை தற்போது 650 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன என் றார்.
ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா, சுகாதார துணை இயக்குநர் கலை வாணி, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago