குமரியில் கரோனாவுக்கு போலீஸ் ஏட்டு உட்பட 15 பேர் உயிரிழப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,208 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கன்னியாகுமரி காவல் நிலைய ஏட்டு ஜெயக்குமார் உட்பட 15 பேர் கரோனாவால் மரணமடைந்தனர்.

மாவட்டத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 6,570 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு தனிமைப்படுத்தலில் 3,763 பேர் உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, கன்கார் டியா பள்ளி, தக்கலை அரசு மருத்துவ மனை ஆகிய இடங்களில் ஏற்கெனவே கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது கருங்கல் பெத்லேகம் பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி, பூதப்பாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஈத்தாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நாளை (திங்கட்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 589 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் 6,608 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று மட்டும் 781 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 553 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 301 பேர் குணமடைந்தனர். தற்போது 3,713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் 9 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 893 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 819 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,077 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர்.

தென்காசியில் நேற்று 553 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 9 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்