செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் சித்த மருத்துவ பிரிவு விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத் துவமனை, கரோனா பராமரிப்பு மையம் மற்றும் சிறப்பு முகாம் களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன் தினம் ஆய்வு செய்தார்.அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தினசரி 1,500 கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன்500 படுக்கைகள் உள்ள நிலையில், கூடுதலாக 150 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. செய்யாறு அரசு தலைமை மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசதியுடன் 70 படுக்கைகள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மூலம் ஆக்சிஜன் வசதியுடன் உள்ள 1,200 படுக்கைகள் மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி அலகு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதலாக 20 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங் கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவம் மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல், செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தெள்ளார் மற்றும் காரப்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்காக சிறப்பு கரோனா பிரிவு செயல்படுகிறது.
தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவ மனைகள் மற்றும் கரோனா பராமரிப்பு மையங்களில் சிகிச்சை அளிக்க கூடுதலாக 35 மருத்து வர்கள், 50 செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 232 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன” என்றார்.
பின்னர் அவர், வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடைபெறுவதை ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago