திருப்பத்தூர் மாவட்டத்தில் காய்ச் சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் இருப்பவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று அனை வருக்கும் உடல் வெப்ப நிலை மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீரான சுவாசம் மற்றும்ஆக்சிஜன் அளவு 94 இருந்தால் அவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு மாத்திரைகள் வழங்கப்பட்டு வீட்டிலேயே கண்காணித் துக்கொள்ள அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.
அதேபோல், ஆக்சிஜன் அளவு 94-ல் இருந்து இருந்து 90-க்குள் சீரான சுவாசம் இல்லாமல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் அறிவுரையின் பேரில் கரோனா சிறப்பு கண் காணிப்பு மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மேலும், ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழே இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், முதல் நிலையிலேயே பொதுமக்கள் பரிசோதனை செய்துகொண்டால் முறையான சிகிச்சை பெற்று சில நாட்களி லேயே குணமடைந்து விடு கின்றனர். தொற்று மற்றவர் களுக்கு பரவுவதும் குறைக்கப்படு கின்றன. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாதாரண காய்ச் சல், உடல் வலி என்று வீட்டிலே இருந்துவிட்டு ஆக்சிஜன் அளவு குறைந்த பிறகு மருத்துவ மனைக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி அபாய கட்டத்தை அடைந்து இருப்பதால் இந்த சிக்கலை முதலிலேயே களைய வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த மருத்துவ பரிசோதனைக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
அதேபோல், அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் யாராவது நோய் தாக்கப்பட்டு வீட்டில் இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப் பாட்டு அறையை 04179-222111, 229008, 229006, 2266666, 220020,221104 அல்லது 94429-92526 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago