விழுப்புரத்தில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி இயங்கிய 4 கடைகள் சீல் வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கி வருகின்றன.

மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விழுப்புரம் நகரில் அரசின் முழு ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த் துறையினர் காவல்துறையினர் உதவியுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஊரடங்கை மீறித் திறப்பு

அப்போது விழுப்புரம் கே.கே.சாலை மணிநகர் பகுதியில் முழு ஊரடங்கை மீறி முட்டை விற்பனை கடை, டீக்கடை ஆகிய 2 கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த 2 கடைகளையும் சீல் வைத்தனர். மேலும் அந்த முட்டை விற்பனை கடையின் உரிமையாளருக்கு ரூ.2,200, டீக்கடைக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

மேலும் விழுப்புரம் சாலாமேடு செல்லும் வழியில் திறந்திருந்த மரச்செக்கு எண்ணெய் விற்பனை கடையையும், மாம்பழப்பட்டு சாலையில் திறந்திருந்த பெட்டிக்கடையையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்