விழுப்புரம் மாவட்டத்தில் - கிராமங்களில் அதிகரிக்கும் கரோனா : தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டங்களில் கிராமங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 27, 788 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 24,096 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 189 பேர் உயிரிழந்துள்ளனர் எனமாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் ஏற்படும்தொற்றில் 26 சதவீதம் நகராட்சிபகுதிகளிலும், 74 சதவீதம் கிராமப்புறங்களிலும் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியது:

கிராமங்களில் சுற்றித் திரியும் போலி மருத்துவர்கள் மூலம் அவர்கள் அளிக்கும் மருந்துகளை மக்கள்எடுத்து வருகின்றனர். இதனால் 80 சதவீதத்திற்கும் மேல் தொற்று ஏற்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அங்கு ஏற்கெனவே தொற்றாளர்களால் நிரம்பி வழிவதால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைப்பதில்லை.

கடந்த ஆண்டு கரோனா தொற்று தொடங்கியபோது, கிராமங்களில் வெளியூர் ஆட்களை உள்ளே அனுப்பாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொண்டனர். தற்போது மக்களிடம் ஏற்பட்ட விரக்தியால், வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதனால் கிராமங்களில் கரோனா தொற்றை கண்டறியும் முகாம் நடத்தினாலும் பெரும்பாலானோர் பரிசோதனைக்கு வருவதில்லை. அப்படி பரிசோதித்து தொற்று உறுதி செய்யப்பட்டால் அதை கவுரவகுறைச்சலாக எடுத்துக்கொள்கின் றனர். தடுப்பூசி குறித்த மக்களின் அச்சத்தை போக்கியாக வேண்டும். அதற்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு நேரம் இல்லை. தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் இப்பணியை செய்து, கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் மட்டுமல்ல. அவரசமும் கூட” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்