ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள இடங்களில்அரசு கட்டிடங்களில் கரோனா சிகிச்சை : அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

படுக்கை வசதிகள் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ள ஊர்களில் அரசு கட்டிடங்களில் படுக்கை வசதிகளு டன் தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியது: காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் தாமாக மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாமல், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே எடுத் துக் கொள்ள வேண்டும். கரோனாவை தடுப்பதற்காக நம்மிடம் பேராயுதமாக இருப்பது தடுப்பூசி தான். இதை, அச்சமின்றி மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்.

படுக்கை வசதிகள் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள ஊர்களில், கரோனா தொற் றாளர்களுக்கு தனியாகவும், மற்ற நோயாளிகளுக்கு தனியாகவும் சிகிச்சை அளிப்பதற்கு அரசு கட்டிடங்களில் படுக்கை வசதிகளுடன் தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் இவ்வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று, மற்ற இடங்களிலும் படிப்படியாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், சுகாதார துணை இயக்கு நர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்