மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினமான மே 21-ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியேற்றனர்.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க அனைத்து ஊழியர்களும் உறுதி மொழியேற்றனர்.
மாநகராட்சியின் ரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம் மற்றும் பொன்மலை ஆகிய கோட்ட அலுவலகங்களிலும் அந்தந்த கோட்ட உதவி ஆணையர் தலைமையில் உறுதிமொழி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவ லகத்தில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன் உட்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியேற்றனர்.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த.ரத்னா தலைமையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியேற்றனர். அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப் பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் கொடுஞ் செயல் எதிர்ப்பு உறுதிமொழியேற்றனர்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியேற்றனர்.
காரைக்கால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராஜீவ் காந்தியின் படத் துக்கு ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி, எம்எல்ஏ பி.ஆர்.சிவா மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியேற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago