மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு இடையே வேளாண் பொருட்களை விற்பனை செய்ய நுழைவுச் சீட்டு பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் போக்கு வரத்து மற்றும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் விவசாய பணிகள் தடை இல்லாமல் தொடரவும், பொதுமக்களுக்கு தடையின்றி வேளாண் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் விளையும் விளைப் பொருட் களை மாவட்டத்துக்கு உள்ளே மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்ய நுழைவுச் சீட்டு பெற வேண்டும். ஆதார் அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை, ஓட்டுநர் வாகன உரிமை சான்று, வாகனத்தின் பதிவுச் சான்று, பயணம் செய்பவர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து விவசாயிகள் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
திருவண்ணாமலை வேளாண் உதவி இயக்குநர் (94444-84046), தோட்டக்கலை உதவி இயக்குநர் (76390-94344), துரிஞ்சாபுரம் வேளாண் உதவி இயக்குநர் (89031-88761), தோட்டக்கலை உதவி இயக்குநர் (96293- 05619), கீழ்பென்னாத்தூர் வேளாண் உதவி இயக்குநர் (90474-31671), தோட்டக்கலை உதவி இயக்குநர்(95003-83647). செங்கம் வேளாண் உதவி இயக்குநர்(63699 -76049), தோட்டக்கலை உதவி இயக்குநர் (81247-48557), தண்டராம்பட்டு வேளாண் உதவி இயக்குநர் (94434 -38310), தோட்டக்கலை உதவி இயக்குநர் (94865-68311) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், புதுப்பாளையம் வேளாண் உதவி இயக்குநர் (99423-47569), தோட்டக்கலை உதவி இயக்குநர் (99766-22864), போளூர் வேளாண் உதவி இயக்குநர் (95977-60120), தோட்டக்கலை உதவி இயக்குநர் (63822-91667), கலசப்பாக்கம் வேளாண் உதவி இயக்குநர் (99423-47569), தோட்டக் கலை உதவி இயக்குநர் (90034 -82139), சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குநர் (72007-10125), தோட்டக் கலை உதவி இயக்குநர் (76670-34777), ஆரணி வேளாண் உதவி இயக்குநர் (95787-10856), தோட்டக்கலை உதவி இயக்குநர் (94436-96846), மேற்கு ஆரணி வேளாண் உதவி இயக்குநர்(95787- 10856), தோட்டக்கலை உதவி இயக்குநர் (90034-15482), தெள்ளாறு வேளாண் உதவி இயக்குநர் (97510-67474), தோட்டக்கலை உதவி இயக்குநர் (95008-18721) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல், வந்தவாசி வேளாண் உதவி இயக்குநர் (97861-46804), தோட்டக்கலை உதவி இயக்குநர் (85250-47880), வேளாண் துணை அலுவலர் (96553-49251), பெரணமல்லூர் வேளாண் உதவி இயக்குநர் (94434-38310), தோட்டக்கலை உதவி இயக்குநர் (76670-34777), செய்யாறு வேளாண் உதவி இயக்குநர் (95667-46982), தோட்டக் கலை உதவி இயக்குநர் (91508-13165), அனக்காவூர் வேளாண் உதவி இயக்குநர் (94867-51558), தோட்டக்கலை உதவி இயக்குநர் (97903-35462), வெம்பாக்கம் வேளாண் உதவி இயக்குநர் (95667-46982), தோட்டக்கலை உதவி இயக்குநர் (95974-49755), ஜமுனாமரத்தூர் வேளாண் அலுவலர் (96558- 67800), தோட்டக் கலை உதவி இயக்குநர் (86088- 68741) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் போது கரோனா தொற்று பரவலை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து கையுறை அணிந்து விளைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago