சத்துவாச்சாரியில் காய்கறி கடைகள் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரி பகுதிக்கான காய்கறி கடைகள் தனியார் பள்ளி வளாகத்துக்கு நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மொத்த மற்றும் சில்லறை காய்கறி கடை களுடன் உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அதன்படி,வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம் மன் கோயில் வளாகத்தில் உள்ள காய்கறி கடைகள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கி வருகின்றன. தினசரி கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால், தற்காலிக காய்கறி கடைகள் அமைந்துள்ள பகுதியில் கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, கெங்கை யம்மன் கோயில் மற்றும் வள்ள லார் பகுதி காய்கறி கடைகள் வியாபாரத்தில் ஈடுபட நேற்று முதல் காய்கறி வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சத்துவாச்சாரி, ரங்காபுரம், வள்ளலார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வசதிக்காக ஹோலிகிராஸ் பள்ளி மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. இங்கு, போதிய இட வசதி இருந்த தால் காய்கறிகளை பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சத்து வாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்தில் உள்ள காய்கறி கடைகள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும். மற்ற இடங்களில் காய்கறி வியாபாரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்