கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி நாளையொட்டி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில், ஆட்சியர் அலு வலக அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகியவை நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுவோம்.
எல்லா மக்களிடத்தும் அமைதி, சமுதாய, ஒற்றுமை நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடுவோம் என நாம் உறுதி ஏற்போம் என கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி நாளையொட்டி உறுதிமொழியை ஆட்சியர் சிவன் அருள் வாசிக்க, அதை தொடர்ந்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கொடுஞ்செயல் உறுதி நாளையொட்டி உறுதி மொழி ஏற்க அதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன்புஷ்பராஜ் தலைமையிலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையிலும் கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago