முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கால்நடை மருத்துவர் கூட்டமைப்பு கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் சுமார் 2,200 கால்நடை மருத்துவர்கள், 1,300-க்கும் மேற்பட்ட கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் 4,500-க்கும் மேற்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியாளர்கள் அன்றாட கால்நடை மருத்துவப் பணியோடு கடந்த அரசு செயல்படுத்திய விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் தொடர்புடைய பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் மண்டல இணை இயக்குநர், சீனியர் கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர்கள், 4 கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் 5 கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் முன்களப் பணியாளராக அறிவித்து, பாதிக்கப்பட்ட அலுவலர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்