கரூர் பேருந்து நிலையத்தில் நேற்று தரைக்கடை காய்கறி வியாபாரிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கரூர் உழவர் சந்தைக்கு வெளியே தரைக்கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கரூர் பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் தரைக்கடை வியாபாரிகள் கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு வியாபாரிகளுக்கு நேற்று கரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago