கரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் : அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில், கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, இணையவழி மூலம் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியது:

அரியலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றி, கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பின்னர், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசியின் இருப்பு விவரம் உள்ளிட்டவை குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்கு, ஆட்சியர் த.ரத்னா முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், எஸ்.பி வீ.பாஸ்கரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்