போளூரில் அசாம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தி.மலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், போளூர் காவல் துறையினர் நேற்று முன்தினம், சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பென்னகர் கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்(34), போளூர் பாரதிதாசன் தெருவில் வசிக்கும் வைகுந்த்(27), போளூர் அடுத்த வசூர் கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை(47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.34 லட்சம் மதிப்பிலான 4,847 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.7,040 கைப்பற்றப்பட்டது.
மேலும், கடை உரிமையா ளர்களான வேலூர் வேலப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, ஆரணி அடுத்த பழைய கொங்கராம்பட்டு கிராமத்தில் வசிக்கும் சத்தியமூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago