சிலர் பொது முடக்கத்தை மதிக்காமல், சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு சுற்றியவர்களிடம் இருந்து கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 330 இருசக்கர வாகனங்கள், 2 மூன்றுசக்கர வாகனங்கள், 5 நான்குசக்கர வாகனங்கள் என 337 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று விழுப்புரம் சிக்னல் அருகே கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறிய வாகன ஓட்டிகளை, சுகாதாரத் துறையினர் முன்னிலையில் போலீஸார் கரோனா தடுப்பு உறுதிமொழியை எடுக்க வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago