விழுப்புரத்தில் கரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கல் :

விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் திமுகவினர் மற்றும் பொதுமக்களிடம் திரட்டினர்.

அந்தவகையில் விழுப்புரம் காவல்துறை சார்பில் ரூ.1 லட்சம், தொமுச சார்பில் ரூ.1 லட்சம், பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.75 ஆயிரம், முன்னாள் எம்எல்ஏ சீதாபதி ரூ.50 ஆயிரம், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ரூ.25 ஆயிரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ரூ.10 ஆயிரம், விழுப்புரத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் கௌதம் தான் சேர்ந்து வைத்த உண்டியல் பணம் என மொத்தம் ரூ.23,16,807 உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரிடம் நேற்று வழங்கினர்.

கடந்த 2 நாட்களில் மாவட்டத் தில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 57 ஆயிரத்து 224 கரோனா நிவாரண நிதியாக பெறப்பட்டது. இந்த நிதியை நேற்று மாலை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மணிகண்ணன், ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்