நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திட்டப் பணி தீவிரம் : பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் தகவல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பணிகளை நேற்று ஆய்வு செய்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கூறியது:

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், அரசு சார்பில் 30 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய சுகாதாரப் பணிகள், நபார்டு மற்றும் பொது சுகாதாரத் துறை ஆகியவற்றின் சார்பில், நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 10 நாட்களுக்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 180 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 23 இடங்களில் 1,063 படுக்கைகளும், 326 ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் திருமால், மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்