கரோனா விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க - பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைப்பு : கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களைக் கண்டறிந்து, அபராதம் விதிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களைக் கண்டறிந்து, அபராதம் விதிக்க வருவாய், காவல், உள்ளாட்சித் துறை அலுவலர்களைக் கொண்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, வீட்டுத்தனிமையில் இருக்கும் கரோனா தொற்றாளர்கள் வெளியே சுற்றித்திரிந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கரோனா பாதுகாப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

எனவே, பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்து, அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE