மாநகராட்சி அலுவலர்களுடன் டிஆர்ஓ ஆலோசனை :

By செய்திப்பிரிவு

பொதுமக்கள் தொலைபேசி மூலம் அளிக்கும் கோரிக்கைகளை மாநகராட்சி அலுவலர்கள் நிறை வேற்ற வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்படு பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், அதற்கான தகவல்களை நோயாளிகளுக்கு தெரிவிக்க வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ‘கரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டளை அறை’ அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பாக கட்டளை அறை தொலைபேசி எண்:1077-ல் தொடர்பு கொண்டு நோயாளியின் விவரம், நோயின் தாக்கம் மற்றும் அவரது உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு குறித்தும் கட்டளை அறைக்கு தகவல் தெரிவித்தால் அங்கு இருக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தை அறிந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கை வசதி மற்றும் ஐசியு பிரிவு ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களை உடனுக்கு உடன் நோயாளிகளுக்கு தெரிவிக்கும் பணிகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, பொது மக்கள் மற்றும் நோயாளிகள் தொலைபேசி எண்ணில் தெரிவிக்க கூடிய புகார் மற்றும் கோரிக்கைகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலு வலர்கள், மருத்துவர்கள் கொண்ட குழுவினர் உடனுக்கு உடன் பதில் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்