வேலூர் மாநகராட்சியில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப் படுத்த வீடு, வீடாகச் சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் முழு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ராட்சத இயந் திரங்கள் மூலம் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள பகுதி முழுவதும் வீடு, வீடாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவல் அதிமாக உள்ள வார்டு களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியே வர முடியாதபடி சாலைகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தனித்தனியாக சுகாதார குழுவினர் களமிறக்கப் பட்டுள்ளனர். அக்குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். காட்பாடியில் அதிக கரோனா தொற்று இருப்பதால் அங்கு பரிசோதனைகள் தீவிரமாக் கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி போன்றவை உள்ளதா? என கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல ஆலோசனை வழங்கி வருகின்றனர். காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் 24 தெருக் களில் வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்தனர்.
மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் பரிசோ தனைக்கு வரும் போது, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்து பணிகளை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் யாருக்காவது, காய்ச்சல், இருமல், சளி தொந் தரவு இருந்தால் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இருந் தாலோ உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப் பாட்டு அறை அல்லது சுகாதாரத் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடுவது தெரியவந்தா லும் தகவல் அளிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago