புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் விவசாயிகளிடம் இருந்து மல்லிகை, முல்லை, ரோஸ், சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் தினசரி 15 டன் கொள்முதல் செய்யப்பட்டு, பிற மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு பூ வியாபாரமும் பாதிக்கப்பட்டது. எனினும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பூக்களில் விற்பனை செய்யப்பட்டதுபோக, மீதமுள்ளவற்றை குப்பையில் கொட்டி வந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், மே 24-ம் தேதி வரை பூக்கடைகளை மூடுவது என முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago