இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனம் காஸா பகுதியில் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசி கொன்று குவித்து வருவதைக் கண்டித்தும், ரம்ஜான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் லப்பைக்குடிக்காடு மற்றும் வி.களத்தூர் கிளை சார்பில் இணைய வழிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் காரணமாக திரளான முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் இஸ்ரேலை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அதை இணையத்தில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago